Published : 28,Jan 2023 11:14 AM

”இது லிஸ்ட்லயே இல்லையே” : Ex காதலர்களை வரவைத்து மூக்கை உடைத்த மணப்பெண்!

Bride-takes-revenge-on-her-exes-----with-surprise-at-her-wedding

சலசலப்புகளுக்கும், வேடிக்கையான நிகழ்வுகளுக்கும் பஞ்சமே இருக்காத ஒரு நிகழ்ச்சியாகவே திருமணங்கள் இருக்கும். திருமண நிகழ்வின் போது நடக்கும் பலவும் எளிதிலேயே சமூக வலைதளங்களில் வைரலாவது வாடிக்கையாகி வருகிறது.

அந்த வகையில் மணப்பெண் ஒருவர் தன்னுடைய அனைத்து முன்னாள் காதலர்களையும் தனது திருமணத்துக்கு வரவழைத்துள்ள வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியிருக்கிறது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கடந்த ஜனவரி 8ம் தேதி நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்தான் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

Bride's ex-boyfriends sit together on a table

பெரும்பாலும் முன்னாள் காதலன்/காதலி தனது திருமணத்துக்கு வருவதை விரும்ப மாட்டார்கள். ஏனெனில் உருகி உருகி காதலித்தவர் வேறொருவருடன் வாழப் போவது எவருக்குமே வருத்தத்தையும் கஷ்டத்தையும் கொடுக்கும் என்பதால் அதனை தவிர்ப்பது வாடிக்கை.

ஆனால் அர்த்தமே இல்லாமல் பிரிந்தவர்கள் முன்பு உன்னைவிட எனக்கு வேறு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இந்த சீன பெண் தனது முன்னாள் காதலர்களை திருமண வரவேற்பு அழைத்ததோடு, அவர்களுக்கென தனியாக Table of Ex Boyfriends என்ற இருக்கைகளையும் ஏற்படுத்தி காண்போரின் புருவங்களை உயர்த்தச் செய்திருக்கிறார்.

image

அந்த மணப்பெண் நினைத்ததை போலவே, தன்னுடைய காதலி மணக் கோலத்தில் செல்வதை கண்டு முன்னாள் காதலர்கள் சிலர் வருத்தத்துடன் இருப்பதை வைரலான வீடியோ மூலம் காணமுடிகிறது. அதேபோல மணப்பெண் சந்தோஷமாக வரவேற்பு நிகழ்ச்சிக்கு மணமகனுடன் செல்வதை காண முடியாமல் தலையை குனிந்தபடியும் சிலர் இருந்திருக்கிறார்கள் என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்