Published : 23,Jan 2023 06:05 PM
கே.எல். ராகுல், அதியா திருமணம் - ஹம்மா, ஹம்மா சங்கீத் பாடல் முதல் தெறிக்கவிடும் மீம்ஸ் வரை

இந்திய அணியின் துணைக் கேப்டன் கே.எல்.ராகுலும், பாலிவுட் நடிகையான அதியா ஷெட்டியின் திருமணம் கோலகலமாக மும்பையில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், சங்கீத் நிகழ்ச்சிலு ஏ.ஆர். ரஹ்மானின் ‘பம்பாய்’ படத்தின் பாடலான ஹம்மா, ஹம்மா பாடல் முதல் பல்வேறு இந்திப் பாடல்களுக்கு திருமணத்திற்கு வந்த உறவினர்கள் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழில் ‘12B’, ‘தர்பார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளதுடன், தெலுங்கு, மலையாளம், மராத்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவராக வலம் வருபவர் பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டி. இவரின் மகளும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியும், இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான கே.எல்.ராகுலும் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் வருகிற ஜனவரி அல்லது மார்ச் மாதம் மிகப் பிரம்மாண்டமாக நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்த நிலையில், அது உறுதிசெய்யப்பட்டு இன்று திருமணம் நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி அருகேயுள்ள கண்டாலாவில், அதியா ஷெட்டியின் தந்தை சுனில் ஷெட்டிக்கு மிகப்பெரிதான பண்ணை பங்களா ஒன்று உள்ளது. அங்குதான், தற்போது கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டிக்கு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரஹ்மானின் ‘பம்பாய்’ பட பாடலான ‘ஹம்மா ஹம்மா’, ஷாருக்கானின் ‘பதான்’ பட பாடலான ‘பேஷராம் ரங்’ உள்பட பல இந்திப் பாடல்கள் ஒலிக்கப்பட்டு, விருந்தினர்கள் நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
இன்றைய திருமண நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் இஷாந்த் சர்மா, போனி கபூரின் மகள் அன்சுலா கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள செல்லும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. அஜய் தேவ்கன், சஞ்சய் தத், இஷா தியோல் போன்ற பாலிவுட் பிரபலங்கள் தங்களது சமூகவலைத்தளப்பக்கதில், இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், கேஎல் ராகுல் - அதியா திருமணப் புகைப்படத்துக்காக ரசிகர்கள் காத்திருப்பது உள்பட பல மீம்ஸ்களை ரசிகர்கள் சமூகவலைத்தளப்பக்கங்களில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
6.30 PM. ......#KLRahulAthiyaShettyWeddingpic.twitter.com/DpxIEjZIZr
— KL Siku Kumar (@KL_Siku_Kumar) January 23, 2023

#KLRahulAthiyaShettyWedding

meanwhile all the cricket team at the wedding#SunielShetty pic.twitter.com/bYrFQXqVY2
— Aashima Rai FB (@AashimaRai4) January 23, 2023