Published : 21,Jan 2023 08:16 AM
கோவை: மூணு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது!

கோவை வடவள்ளியில் மூணு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் வடவள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் மூணு நம்பர் லாட்டரி விற்பனை நடப்பதாக அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் வடவள்ளி பேருந்து நிலையம் பின்புறத்தில் வடவள்ளி காவல் நிலைய தனிப்படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த ஒரு சில கடைகளிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு அறையில் அலுவலகம் போல அமைத்து மூணு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த கல்வீரம் பாளையத்தைச் சேர்ந்த முத்துமாணிக்கம், திண்டுக்கலை சேர்ந்த உதயகுமார் ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி விற்பனைக்கான நோட்டுகள், சுமார் 30 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனை அடுத்து அவர்கள் இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.