Published : 14,Jan 2023 07:10 AM

ஆஸி, நியூசி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: டி20 போட்டிகளில் ரோகித், கோலி இல்லை!

Hardik-Pandya-To-Lead-In-NZ-T20Is-Suryakumar-Yadav-Ishan-Kishan-Get-Maiden-Test-Call-Ups

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியுடனான ஒருநாள் தொடர் நிறைவடைந்த பிறகு வருகிற ஜனவரி 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நியூசிலாந்து அணியுடன் தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக ஒருநாள் தொடரும் அடுத்ததாக டி20 தொடரும் நடக்கவிருக்கிறது. நியூசிலாந்து அணியுடனான தொடர் நிறைவடைந்த பிறகு வரும் பிப்ரவரி மாதம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. முதல் டெஸ்ட் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மாவும், டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

image

நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் இடம்பெறவில்லை. இதில் கேஎல் ராகுல் மற்றும் அக்சர் பட்டேல் இருவருக்கு மட்டும் சொந்த காரணங்களுக்காக டி20 தொடரில் இடம் பெறவில்லை என குறிப்பிட்டு இருக்கிறது. ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரிலும் இடம் பெறவில்லை. அதேபோல் இலங்கை அணியுடன் டி20 தொடரில் இடம் பெற்றிருந்த சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை. ஜித்தேஷ் சர்மா அவருக்கு பதிலாக உள்ளே வந்திருக்கிறார்.

நியூசிலாந்து டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (கீப்பர்), ருத்துராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் , அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி, பிருத்வி ஷா, முகேஷ் குமார்.

நியூசிலாந்து ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷன் (கீப்பர்) , விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பரத் (கீப்பர்) , ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

image

இதேபோல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை பொறுத்தவரை கே.எல்.ராகுல் மற்றும் அக்சர் படேல் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  சூர்யகுமார் யாதவ் முதல்முறையாக டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். மேலும், இளம்வீரர்கள் கேஎஸ் பாரத் மற்றும், இஷான் கிஷன் இருவரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். காயத்தால் அவதிப்பட்டு வந்த ரவீந்திர ஜடேஜா உடற்தகுதி பெறும் பட்சத்தில் அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத், இஷான் கிஷன், ரவி அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்