98 வயதில் எம்.ஏ. முடித்துள்ள பாட்னா ’இளைஞர்’ வறுமை ஒழிப்பு பற்றி கவிதை எழுத இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பாட்னாவை சேர்ந்தவர் ராஜ்குமார் வைஷ்யா. வயது 98. இவர் கடந்த வருடம் நாலந்தா திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தேர்வு எழுதினார். நேற்று முறைப்படி எம்.ஏ. டிகிரியை பெற்றுள்ளார். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் 1938-ல் பொருளாதாரத்தில் டிகிரி முடித்த இவர், பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து, 1980-ல் ஓய்வு பெற்றார். முதுகலை படிக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசை. அதை இப்போது நிறைவேற்றியிருக்கிறார் வைஷ்யா. இவர் எம்.ஏ தேர்வு முடிவு நேற்றுதான் இவருக்கு கிடைத்துள்ளது. இப்போது இவர், வறுமை ஒழிப்பு பற்றி கவிதை எழுத இருப்பதாகக் கூறியுள்ளார்.
‘சுதந்தர போராட்டக் காலங்களில் வறுமை ஒழிப்பு என்ற வார்த்தை அடிக்கடி எங்கள் காதில் ஒலிக்கும். இப்போதும் அந்த வார்த்தை ஒலித்துக்கொண்டிருக்கிறது. இன்னும் வறுமை ஒழியவில்லை. குடிசை பகுதி புகைப்படங்களை எடுக்க, என் மகனிடம் கேமரா கேட்டுள்ளேன். பின் அது தொடர்பாக கவிதை, கட்டுரை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்ப இருக்கிறேன்’ என்கிறார்.
எம்.ஏ.,வில் பாஸ் ஆவதற்கு ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரான மகனும் பேராசிரியையான மருமகளும் காரணம் என்கிறார் வைஷ்யா.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!