Published : 12,Nov 2022 08:11 AM

தோற்றாலும் இவ்வளவு கோடியா..? இந்திய அணிக்கு கிடைக்கும் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

How-much-prize-money-did-Rohit-Sharma-Team-India-get-from-T20-World-Cup-2022-as-losing-semi-finalist-Check-here

டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி சுற்று வரை வந்த இந்திய அணிக்கு கிடைக்கப்போகும் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் பயணம், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தின் வாயிலாக முடிவுக்கு வந்தது. ஒரு மோசமான தோல்வியுடன் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறது இந்தியா. இந்த முறையும் உலகக் கோப்பை கைகூடாததால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இருப்பினும் இந்திய அணி வெறுங்கையுடன் நாடு திரும்பப் போவதில்லை. அரையிறுதி சுற்று வரை வந்த இந்திய அணிக்கு கிடைக்கப்போகும் பரிசுத் தொகை எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

image

ஏற்கனவே ஐ.சி.சி. அறிவித்துள்ளது படி கோப்பையை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 13 கோடி) பரிசு வழங்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலரும், அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலரும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் அரையிறுதியில் தோல்வியுற்ற இந்திய அணிக்கு 4 லட்சம் அமெரிக்க டாலர் (ரூ.3.22 கோடி) பரிசுத்தொகை கிடைக்கும்.

image

மேலும் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு 40 ஆயிரம் டாலர் வழங்கப்படும். சூப்பர் 12 சுற்றில் இருந்து வெளியேறும் 8 அணிகளுக்கு தலா 70 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்படும். அந்த வகையில் சூப்பர் 12 சுற்றில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றதால் இந்திய அணிக்கு ரூ.1.28 கோடி கிடைக்கும். ஆக மொத்தம் ரூ.4.5 கோடி பரிசுத்தொகையுடன் இந்திய அணி நாடு திரும்புகிறது. தொடரின் மொத்த பரிசுத் தொகை 5.6 மில்லியன் (இந்திய பண மதிப்பில் சுமார் ரூ. 45 கோடி) ஆகும்.

இதையும் படிக்கலாமே: டி20 உலகக் கோப்பை: இந்திய வீரர்களின் சாதனையும், சறுக்கலும் - வெளியான ரிப்போர்ட் கார்டு!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்