Published : 22,Oct 2022 08:15 PM
பட்டப்பகலில் பைக்கில் இருந்த பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்கள்! பகீர் சிசிடிவி காட்சிகள்

கடலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 60 ஆயிரம் பணத்தை 2 மர்ம நபர்களை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் பகுதியில் உள்ள கண்டமாத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். 27 வயதான இவர் தொழுதூர் இந்தியன் வங்கியில் இருந்து 60 ஆயிரம் பணத்தை எடுத்து தனது இரு சக்கர வாகனத்தின் டிக்கியில் வைத்து லாக் செய்து அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு அருகே நிறுத்திவிட்டு மளிகைப் பொருட்களை வாங்கச் சென்றுள்ளார்.
கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் டிக்கியை திறந்து பார்க்கும் போது அதில் இருந்த பணத்தை காணாததால் முருகேசன் அதிர்ச்சி அடைந்துள்ளார். காணாமல் போன 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கண்டுபிடித்து தருமாறு ராமநத்தம் காவல் நிலையத்தில் முருகேசன் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
இரண்டு மர்ம நபர்கள் மளிகை கடைக்கு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த போது அவ்வாகனத்தை நோட்டமிட்டு பணத்தை திருடி செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். அந்த காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை காவல்துறையினர் துரிதப்படுத்தி உள்ளனர்.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/BkajnBdiN5U" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
மக்கள் அதிகம் கூடிய இடத்தில் இருசக்கர வாகனத்தின் டிக்கியில் லாக் செய்து வைக்கப்பட்டிருந்த பணத்தை இரு திருடர்கள் கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களை அச்சத்தியில் ஆழ்த்தியுள்ளது.