Published : 15,Oct 2022 07:30 PM

கன்று ஈன சிரமப்பட்ட பசு மாடு! - மனிதநேய செயலால் பார்த்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய நபர்!

Tiruvarur--The-cow-has-trouble-calving--The-video-of-the-human-who-gave-birth-went-viral-

திருத்துறைப்பூண்டி அருகே சாலையில் கன்று ஈன்றுவதற்கு சிரமப்பட்டு கொண்டிருந்த மாட்டிற்கு, மனிதநேயத்துடன் பிரசவம் பார்த்தவரின் வீடியோ வைரலாகி வருகிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மடப்புரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் மகனை அழைப்பதற்காக அந்த ஊரிலுள்ள மேட்டு தெருவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே நின்றிருந்த மாட்டை, தெரு நாய்கள் விரட்டி கொண்டிருந்தன.

image

இதைப் பார்த்த முருகானந்தம் மாட்டின் அருகே சென்று பார்த்தபோது பசு மாடு கன்று ஈன்றுவதற்காக சிரமப்பட்டு கொண்டிருந்ததை கவனித்துள்ளார். உடனடியாக முருகானந்தம் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த பசு மாட்டிற்கு பிரசவம் பார்த்தார். இதையடுத்து அந்த பசுமாடு கன்று ஈன்று, அதன்பின் தனது கன்றை பாசத்துடன் கொஞ்சியது காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது.

image

தற்போது கன்று ஈன்ற பசு மாடும், அதன் கன்று குட்டியும் நலமாக உள்ளன. கன்று ஈன்ற அந்த பசு மாட்டின் உரிமையாளர் யார் என காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், கன்று ஈன சிரமப்பட்ட பசு மாட்டிற்கு முருகானந்தம் மனிதநேயத்துடன் பிரசவம் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்