Published : 25,Aug 2022 07:11 PM

காதலியை சாதி பெயரை சொல்லி திட்டிய காதலன் கைது - உடந்தையாக இருந்த நண்பருக்கும் சிறை

While-the-police-have-already-arrested-the-boyfriend-who-insulted-the-woman-he-loved-by-calling-her-caste-names-and-sent-him-to-jail

ஓமலூர் அருகே காதலித்த பெண்ணை சாதிப் பெயரை சொல்லி திட்டியதுடன் தாக்குதல் நடத்திய காதலனை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், தற்போது அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரும் கைதாகியிருக்கிறார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி காவல் நிலைய எல்லையில் மானத்தாள் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் கோவிந்தராஜ் என்பவரது 26 வயது மகள் பூங்கொடி, தொளசம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மேச்சேரியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்யும்போது, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் ஈஸ்வரன் (36) என்பவரிடம் பழகி வந்துள்ளார். பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதன்பின் பூங்கொடி மேச்சேரிக்கு வேலைக்கு செல்லாமல் தொளசம்பட்டியில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இதனிடையே காதலன் ஈஸ்வரன் அவ்வப்போது பூங்கொடியின் வீட்டுக்கே வந்து சந்தித்து விட்டு சென்றுள்ளார்.

image

இந்தநிலையில், பூங்கொடி, அவரது உறவினர் ஒருவருடன் செல்போனில் அடிக்கடி பேசுவதாக தகவலறிந்த ஈஸ்வரனும், அவரது லாரியில் கிளீனராக வேலை செய்யும் தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியை சேர்ந்த சேட்டு என்கின்ற முருகனும் சேர்ந்து தொளசம்பட்டிக்கு வந்துள்ளனர். பின்னர் காதலி பூங்கொடி வீட்டிற்கு சென்று, யாருடனும் போன் பேசக்கூடாது எனக் கூறியுள்ளனர்.

இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஈஸ்வரன் பூங்கொடியை ஜாதி பெயரை கூறி, ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொண்டே தாக்கியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட பூங்கொடி, தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த வாரத்தில் காதலன் ஈஸ்வரனை, சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இவரது நண்பர் சேட்டு என்கின்ற முருகன் ஈரோடு பகுதியில் பதுங்கி இருந்ததை அறிந்த போலீசார், அங்கு சென்று முருகனை கைது செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிக்க: வித்தியாசமான திரவப் பொருளால் புதுப்பெண் எரித்துக் கொலை?..திருமணமான 4 மாதங்களில் அதிர்ச்சி!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்