[X] Close

நீட் தேர்வினால் சமூக நீதி பாதிக்காது: ஹெச்.ராஜா பேச்சு

social-justice-will-not-affect-in-neet-exam-basis-selection-said-h-raja

நீட் தேர்வினால் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்படாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.


Advertisement

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நீட் ஆதரவு போராட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, +2 கட் ஆஃப் மதிப்பெண்ணின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தினாலும், நீட்-ன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடித்தினாலும் 69 சதவீத இடஒதுக்கீடு இருக்கும் போது சமூக நீதிக்கு எப்படி பங்கம் ஏற்படும்? நீட்-ன் அடிப்படையில் இடஒதுக்கீட்டில் ஏதாவது மாற்ற இருக்கும், இடஒதுக்கீடு இல்லை என்று யாராவது சொல்லி இருந்தால், சமூக நீதிக்கு ஆபத்து இருக்கும் என்று பேசலாம். நீட்-ல் அது போல எதுவுமே இல்லை. மேலும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close