[X] Close

அறுந்து விழும் நிலையில் கொடைக்கானல் மரப்பாலம்: விவசாயிகள் அச்சம்

Kodaikanal-Tree--Fear-of-farmers

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை, பெரியாற்றில் உள்ள மரப்பாலம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருப்பதால் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


Advertisement

கொடைக்கானலில் தொடர் மழை பெய்து வருவதால், பழனிக்கு செல்லும் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேத்துப்பாறையை ஒட்டியுள்ள சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்ல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பெரியாற்றில் மரப்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது அந்தப் பாலம் சேதமடைந்து அறுந்து விழும் நிலையில் இருப்பதால் விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்ல அச்சமாக இருப்பதாகக் கூறுகின்றனர். எனவே அரசு கவனத்தில் கொண்டு புதிய மரப்பாலம் அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close