பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த டிசம்பரில் இருந்து இதுவரை 5 முறை வட்டி விகிதத்தை பேங்க் ஆப் இங்கிலாந்து உயர்ந்திருக்கிறது.
இங்கிலாந்து நாட்டில் நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. மே மாத பணவீக்கம் 9.1 சதவீதமாக இருக்கிறது. 1982-ம் ஆண்டுக்கு பிறகு பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. எரிபொருள் விலை உயர்ந்துவருவதால் நடப்பு ஆண்டு முடிவுக்குள் பணவீக்கம் 11 சதவீதம் அளவுக்கு உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் பணவீக்கம் மே மாதத்தில் உயர்ந்திருக்கிறது.
உக்ரைன் போர் காரணமாக இங்கிலாந்து மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பல நாடுகளில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கோதுமை மற்றும் மைதா போர் நடக்கும் பகுதிகளில் இருந்துதான் கிடைக்கிறது. அங்கிருந்து ஏற்றுமதி குறைந்திருப்பதால் பிரட் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது. அதேபோல சூரிய காந்தி எண்ணெயை அதிகம் உற்பத்தி செய்வதும் உக்ரைன்தான்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த டிசம்பரில் இருந்து இதுவரை 5 முறை வட்டி விகிதத்தை பேங்க் ஆப் இங்கிலாந்து உயர்ந்திருக்கிறது. பணவீக்கம் காரணமாக ஊதிய உயர்வு கோரி ரயில் ஊழியர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 82 சதவீதத்தினர் பணவீக்கத்தை சமாளிக்க ஊதிய உயர்வு அவசியம் என கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
- வாசு கார்த்தி
இதையும் படிக்கலாமே: வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
Loading More post
ஆட்டோ மீது திடீரென அறுந்து விழுந்த மின் கம்பம்... 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு
‘மழை பெஞ்சா என்ன? சிறுவனை நாங்க கைவிடமாட்டோம்’- ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு
Fact Check: ரசிகருக்கான பிறந்த நாள் வாழ்த்து கடிதத்தில் தேதியை மாற்றி எழுதினாரா அஜித்?
உத்தவ் தாக்கரே ராஜினாமாவால் பாஜகவினர் கொண்டாட்டம் - முதல்வராகிறார் ஃபட்னாவீஸ்
தமிழ்நாடு போலீஸாக விருப்பமா? உங்களுக்காக இன்று வருகிறது அப்டேட்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix