Published : 20,Jun 2022 12:39 PM

புதிதாக 200 விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா?

It-has-been-reported-that-Air-India-is-planning-to-buy-200-new-aircraft

ஏர் இந்தியா புதிதாக 200 விமானங்களை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அரசு வசம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கி கடந்த ஜனவரி மாதம் முதல் இயக்கி வருகிறது.

image

விமான சேவையை சீரமைக்கும் வகையில் 200 புதிய விமானங்களை வாங்க டாடா திட்டமிட்டுள்ளது. இதற்காக போயிங், ஏர் பஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியாவில் கடந்த 16 ஆண்டுகளாக புதிதாக ஒரு விமானம் கூட வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்