நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேசமயம் நீட் தேர்விற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதா..? வேண்டாமா..? என்ற குழப்பத்தில் உள்ளனர்.
நீட் தேர்வானது தமிழக கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால்தான், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், தமிழகத்திற்கு இந்தாண்டு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்படும்.
இதனிடையே, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2017-2018-ம் கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க மார்ச் மாதம் 1-ம் தேதி என்ற காலக் கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவந்துள்ள சட்டத்தின் படி, பிளஸ் 2 மதிப்பெண்களை பொறுத்து தமிழக மருத்துவக் கல்லூரியில் இடம் நிரப்பப்படுமா அல்லது நீட் தேர்வு எழுத வேண்டுமா என்ற குழப்பம் அவர்களிடையே நிலவுகிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் உள்ளன. நீட் தேர்வு மூலம் இத்தகைய இடங்கள் நிரப்பப்படுகிறது. மீதமுள்ள 85 சதவீதம் மாநில அரசுக்கு உள்ளது. பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், கலந்தாய்வு நடத்தப்பட்டு இத்தகைய இடங்கள் நிரப்பப்படும். அதேபோல் தனியார் (சுயநிதி) மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 65 சதவிகித இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலும், 35 இடங்கள் நிர்வாகங்கள் தரப்பிலும் நிரப்பப்படுகின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும். இதிலும் மாநில ஒதுக்கீட்டிற்கான இடங்கள், பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். டீம்ட் பல்லைக்கழங்களில் உள்ள மருத்துக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நீட் தேர்வு மூலமாகவே நிரப்பப்படும்.
இதனிடையே மூன்று முறை அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தாலும் இந்த ஆண்டு நீட் நுழைவுத்தேர்வு எழுதலாம் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. 2017-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்வே முதல் நீட் தேர்வாக கணக்கில் கொள்ளப்படும் என்றும், அதற்கு முன் எத்தனை முறை நீட் தேர்வு எழுதியிருந்தாலும் அது கணக்கில் கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முந்தைய காலங்களில் தேர்வு எழுதி தோல்வியுற்று, மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போயிருந்தாலும் இந்தாண்டு அவர்கள் நீட் தேர்வை எழுதலாம்.
Loading More post
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!