Published : 21,May 2022 03:54 PM
தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் டிஜிட்டல் உரிமயைக் கைப்பற்றிய ஓடிடி தளம்

நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியுள்ள ஓடிடி தளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜவஹர் மித்ரனின் ‘திருச்சிற்றம்பலம்’,செல்வராகவனின் ‘நானே வருவேன்’, ‘வாத்தி’ பை-லிங்குவல் படங்களில் நடித்து வரும் தனுஷ் மாரி செல்வராஜ், ராம்குமார், அருண் மாதேஸ்வரன் இயக்கங்களில் அடுத்தடுத்து நடிக்கவிருக்கிறார். இதில், ’திருச்சிற்றம்பலம்’, ‘தி க்ரே மேன்’ ஜூலையில் தனுஷ் 39 வது பிறந்தநாளையொட்டி வெளியாகவுள்ளது. இதற்கு அடுத்ததாக ‘நானே வருவேன்’ தியேட்டர்களில் வரவுள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கினாலும் எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருந்து வந்த படக்குழு சமீபத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரங்களில் நடிப்பதை உறுதி செய்து போஸ்டரை வெளியிட்டது. அதோடு, செல்வராகவனும் இப்படத்தில் நடிக்கிறார் என்பதை தெரிவித்திருந்தார் தயாரிப்பாளர் தாணு.
இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், ‘நானே வருவேன்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தனுஷின் ‘கலாட்டா கல்யாணம்’, ‘மாறன்’ உள்ளிட்டப் படங்கள் ஓடிடியில்தான் வெளியானது குறிப்பிடத்தக்கது.