Published : 17,Apr 2022 10:23 AM

வெற்றி கணக்கை தொடருமா சிஎஸ்கே? அசுரபலம் வாய்ந்த குஜராத்தை சமாளிக்குமா?

today-IPL-match-Chennai-Super-Kings-Gujarat-Titans

வலுவான நிலையில் இருக்கும் குஜராத் அணிக்கு எதிராக சென்னை தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் வெற்றியை தொடர முடியும்.

ஐபிஎல் நடப்பு தொடரில் தொடர்ச்சியான 4 தோல்விகளுக்கு பிறகு, கடந்த போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி, தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் சென்னை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘ப்ளே-ஆப் ’சுற்று வாய்ப்பில் நீடிக்க சென்னை அணி எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டியது முக்கியமானதாகும். கடந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், இந்த போட்டிக்கான சென்னை அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.

image

பெங்களூருவுக்கு எதிராக அரை சதம் விளாசிய ராபின் உத்தப்பா, ஷிவம் துபே மீண்டும் கைகொடுக்கலாம்.  ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு எழுச்சி பெற வேண்டும். கேப்டன் ஜடேஜா, எம்எஸ் தோனி, டுவைன் பிராவோ அதிரடி காட்டும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம். அத்துடன் சென்னை அணியின் பந்து வீச்சும் ஏற்றம் காண வேண்டும். அசுர பலத்தில் உள்ள  குஜராத் அணியை சமாளிக்க வேண்டும்  என்றால் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் அபாரத் திறனை வெளிப்படுத்துவது சென்னை அணிக்கு அவசியமானதாகும்.

image

அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (228 ரன்கள்), சுப்மான் கில் (200 ரன்கள்), டேவிட் மில்லர் ஆகியோர் பேட்டிங்கில் தொடர்ச்சியாக மிரட்டி வருகிறார்கள். வேகப்பந்து வீச்சில் லோக்கி பெர்குசன், முகமது ஷமி அசத்துகின்றனர்.  இவர்களுக்கு ஹர்திக் பாண்டியா ஒத்துழைப்பு தருவது கூடுதல் பலம். சுழலில் ரஷித் கான் நம்பிக்கை அளிக்கிறார்.

வலுவான நிலையில் இருக்கும் குஜராத் அணிக்கு எதிராக சென்னை தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் வெற்றியை தொடர முடியும். அதே நேரத்தில் குஜராத் அணியும் தொடர் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தப் போட்டி மாலை 7:30 மணிக்கு தொடங்குகிறது.

image

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

குஜராத் டைட்டன்ஸ்: 1 சுப்மான் கில், 2 ரஹ்மானுல்லா குர்பாஸ் / மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), 3 பி. சாய் சுதர்சன், 4 ஹர்திக் பாண்டியா (கேப்டன்), 5 அபினவ் மனோகர், 6 டேவிட் மில்லர், 7 ராகுல் தெவாடியா, 8 ரஷித் கான், 9 முகமது ஷமி, 9. லாக்கி பெர்குசன், 11 யாஷ் தயாள்

சென்னை சூப்பர் கிங்ஸ்: 1 ருதுராஜ் கெய்க்வாட், 2 ராபின் உத்தப்பா, 3 மொயீன் அலி, 4 அம்பதி ராயுடு, 5 சிவம் துபே, 6 எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர், 7 ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), 8 டுவைன் பிராவோ, 9 கிறிஸ் ஜோர்டான், 10 மகேஷ் தீக்ஷனா, 11 முகேஷ் சவுத்ரி

இதையும் படிக்க: பஞ்சாபை 'சுட்டெரிக்குமா' சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்? இன்று காத்திருக்கும் பரபரப்பான போட்டி

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்