போதுமான ஓய்வுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்பியதால் விக்கெட் பசி அதிகமாக இருந்தது என்று வேகப்பந்துவீச்சாளர் பும்ரா கூறினார்.
இலங்கைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 15 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதன் முறையாக நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதுபற்றி பும்ரா கூறும்போது, ‘இதற்கு முன் இலங்கையில் நான் விளையாடியதில்லை. இப்போது ஆடியதுதான் முதன்முறை. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறேன். இத்தொடரில் பங்கேற்கும் முன் அதிக நேரம் பயிற்சியில் ஈடுபட்டேன். அதே நேரம் போதுமான ஓய்வுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பியதால் விக்கெட் பசியில் இருந்தேன். டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பது என் கனவு. எனக்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ என்றார்.
பும்ரா பற்றி இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி கூறும்போது, ‘பும்ரா, அணியின் முக்கியமான பந்துவீச்சாளர். கடந்த 18 மாதங்களாக அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்’ என்றார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்