[X] Close

குட்கா விவகாரம் : பதிலளிப்பார்களா திமுக எம்.எல்.ஏக்கள்?

Will-DMK-MLAs-continue-to-be-suspended-

தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவையில் கொண்டு வந்தது தொடர்பாக, திமுக எம்.எல்.ஏக்கள் பதிலளிக்க வேண்டிய காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

கடந்த ஜூலை 19ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தின் போது, தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதாக தி.மு.க சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு ஆதாரம் உள்ளதா என சபாநாயகர் கேட்டதால், தி.மு.க தரப்பில் ஸ்டாலின் உட்பட 21 எம்.எல்.ஏக்கள் போதைப்பொருள் குட்காவை கையில் எடுத்துக் காட்டினர்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் 28ஆம் தேதி சட்டப்பேரவை உரிமைக்குழு கூட்டம் நடைபெற்றது. துணை சபாநாயகரும், உரிமைக் குழு உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் 1 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு அவகாசம் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட காலக்கெடுவானது இன்று மாலையுடன்‌ நிறைவடைகிறது. இதையடுத்து இன்று மாலை வரையிலும் தி.மு.க தரப்பு எம்.எல்.ஏக்களிடம் இருந்து விளக்கம் பெறப்படவில்லை என்றால், அவர்களை இடைநீக்கம் செய்ய சட்டப்பேரவை உரிமைக்குழு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம். இந்நிலையில் குட்காவை சட்டப்பேரவையில் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக, திமுக தரப்பில் ஆலோசனை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close