Published : 31,Aug 2017 09:57 AM
குடித்துவிட்டு வந்தவர்களை தடுத்த போலீசுக்கு தடியடி

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பாலில் இரண்டு பேர் குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள், அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார். இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களில் ஒருவர், போலீஸ் கையில் இருந்த தடியை பிடுங்கி தாக்கியுள்ளார். அவரது தாக்குதலை எதிர்கொண்ட போலீஸ் மீண்டும் தடியை பறித்ததால், அந்த நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.