Published : 19,Feb 2022 04:30 PM

"மத்திய அமைச்சர் எல்.முருகனின் வாக்கு, கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது" - அண்ணாமலை ட்வீட்

Union-Minister-L--Murugan-vote-has-been-cast-as-a-fraudulent-vote--Annamalai-tweet

மத்திய அமைச்சர் எல்.முருகனின் வாக்கு, வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்வீட்டில், "அரசு இயந்திரங்கள் எந்த அளவிற்கு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது

image

திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக கோவையில் வாக்குச்சாவடியின் வாசலில் பண விநியோகம், ஆளுங்கட்சிக்கு சாதகமாக பல இடங்களில் வாக்குப்பதிவும் நிறுத்தப்பட்டு வருகிறது

மத்திய அமைச்சர் எல்.முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது. மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், " அந்த வாக்கு பதிவு மையத்தில் இரண்டு முருகன் பெயர் உள்ளது அதில் ஒன்றுதான் பதிவாகி உள்ளது, மத்திய அமைச்சர் எல் முருகனின் வாக்கை யாரும் போடவில்லை, அவர் வாக்களிக்கலாம்" என தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்