Published : 05,Feb 2022 04:58 PM

“ஆளுநரை திரும்ப பெறுங்கள்” - வேல்முருகன் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகை

நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டார்.

நீட் விலக்கு மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசும் பல அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட முயற்சி செய்தனர்.

மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழக மக்களுக்கும், மாணவர் நலனில் எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். மேலும் பா.ஜ.க அழுத்தம் காரணமாகவே அதிமுக இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார். பின்னர் காவல்துறையின் வேண்டுகோள்படி குறிப்பிட்ட நேரத்தில் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். இந்தப் போராட்டம் காரணமாக 3 மணி நேரம் மேலாக ராஜ்பவன், சின்னமலை அருகே காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதுகுறித்து வேல்முருகன் பேசும்போது, ”நீட் விலக்கு மசோதாவை கிடப்பில் போட்டு வைத்து இருந்தார் ஆளுநர். மத்திய அரசு உடனடியாக அளுநர் திரும்ப பெற வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு. நீட் தேர்வில் தேர்ச்சி இருந்தால் மட்டுமே தேர்வு என்று திணிக்கிறது மத்திய அரசு. நீட் விலக்கு பெற வேண்டும் என்று தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். மீண்டும் தீர்மானம் குறித்து தமிழக அரசு விவாதிக்க இருக்கிறது. தமிழ் மக்களின் இடஒதுக்கீடு, நீட் விலக்கு எதிராக ஆளுநர் இருக்கிறார். அதிமுக- பா.ஜ.க அழுத்தம் காரணமாக தான் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை” என்றார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்