[X] Close

தோல்வி அப்செட் ஆக்கிவிட்டது: பி.வி.சிந்து

I-have-no-words--it-s-really-upsetting--PV-Sindhu

ஸ்காட்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி சிந்து கடும் போராட்டத்திற்குப் பின் வெற்றியை இழந்தார்.


Advertisement

தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் ஜப்பான் வீராங்கனை நசோமி ஒக்குஹரா-வை எதிர்த்து அவர் விளையாடினார். மூன்று செட்கள் வரை நீடித்த போட்டியில் 21-19, 20-22, 22-20 என ஜப்பான் வீராங்கனை ஒகுஹரா வெற்றி பெற்றார். 
 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த ஒகுஹரா, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது இதுதான் முதன் முறை.

சிந்துவுக்கு வெள்ளிப்தக்கம் கிடைத்தது. அவர் , 2013, 2014-ம் ஆண்டுகளில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றிருக்கிறார்.


Advertisement

‘இந்த தோல்வி அப்செட்டாகிவிட்டது. கடைசி நேரத்தில் எல்லாம் மாறிவிட்டது. வெள்ளிப்பதக்கம் கிடைத்ததில் மகிழ்ச்சிதான். இருந்தாலும் வருத்தம் இருக்கிறது’ என்றார் பி.வி.சிந்து.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close