புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் காலமானார். அவருக்கு வயது 83.
நேற்றிரவு, டெல்லியில் உள்ள தனது வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது பண்டிட் பிர்ஜு மகாராஜ் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பண்டிட் பிர்ஜு மகாராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். சமீப காலமாக சிறுநீரகக் கோளாறு காரணமாக பிர்ஜு மகாராஜ் டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிர்ஜு மகாராஜ் தனது திறமைக்காக நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதைப் பெற்றவர் ஆவார். கதக் நடனம் மட்டுமின்றி ட்ரம்ஸ் இசை, கதை சொல்லி, தபேலா வாசிப்பு என பன்முக திறமைகள் கொண்டவர் அவர்.
கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் 'உன்னை காணாத நான்' என்ற பாடலில் கதக் நடனம் இடம்பெற்றிருக்கும். அந்தப் பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்தவர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: புனே: ஓட்டுநருக்கு வலிப்பு - 10 கி.மீ தூரம் பேருந்தை இயக்கிய பெண் பயணி
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!