[X] Close

புத்தாக்க தொழில்களில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக்குவோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

வணிகம்

We-will-make-Tamil-Nadu-a-leading-state-in-innovative-industries-says-Chief-Minister-MKStalin

புத்தாக்க தொழில்களில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக்குவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

சென்னை பழவந்தாங்கலில் புதிய தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் ISBACON 2020 கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.புதிய தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவது தொடர்பாக இந்த கருத்தரங்கத்தை தொடங்கிவைத்து உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், " இந்த கருத்தரங்கின் செயல்திட்ட பரிந்துரை அறிக்கையில் தமிழகத்தின் தொழில் காப்பகங்கள் மேம்பாட்டுக்கான செயல்திட்டங்கள், சவால் மிகுந்த புதிய சூழலில் தொழில் காப்பகங்களுக்கான பரவலாக்கப்பட்ட செயலாக்க மாதிரிகள், பெரு நிறுவனங்களுக்கான சமூக பொறுப்பு கொள்கைகளில் புத்தொழில் உருவாக்கம் மற்றும் காப்பகங்களை இணைத்தல் ஆகியவை உள்ளன, இதனை முறையாக செயல்படுத்தி பயன்பெற வாழ்த்துகிறேன்.

image


Advertisement

தமிழ்நாடு பொருளாதாரம், கல்வி, சமூகநீதியில் முன்னேறிய மாநிலமாகும். தமிழகத்தில் உலகத்தரம் மிகுந்த கல்வி நிறுவங்களின் பயின்ற திறமைமிக்க இளைஞர் சக்தி உள்ளது. தமிழ்நாடு தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில் முனைவின் அடிப்படையில் தேவையான தகுதிகளோடு முன்னணியில் உள்ள மாநிலம் ஆகும். தற்போது தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மூலமாக பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இயக்கம் மூலமாக இதுவரை 29 நிறுவங்களுக்கு ஊக்க உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.எதிர்வரும் ஆண்டுகளில் இந்த உதவி அதிகரிக்கப்படும்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தொழில் காப்பகங்கள் மற்றும் புத்தாக்க பூங்காக்களை உருவாக்கும் செயல்திட்டம் வகுக்கப்பட்ட வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகர் மட்டுமின்றி இரண்டாம் கட்ட நகரங்களில் உள்ள சிறு நிறுவனங்களிலும் முதலீடுகளை அதிகம் பெற்றுள்ளோம். வரும் நாட்களில் தமிழகம் புத்தாக்க தொழில் முனைவோரின் பணத்தோட்டமாக மாறும் என உறுதியளிக்கிறோம். வழக்கமான குறிப்பிட்ட தொழில்கள் மட்டுமின்றி புதிய தொழில்களை நோக்கியும் நமது எண்ணங்கள் செல்லவேண்டும்.

image

உலகில் நான்காம் தொழில்புரட்சி தொடங்கிவிட்டது, செயற்கை நுண்ணறிவு மூலம் தானியங்கி வாகனங்கள், முப்பரிமாண அச்சு , தொலைவழி மருத்துவம், மரபணு தொழில்நுட்பங்கள் என எல்லா துறைகளிலும் மாற்றங்கள் பரவிவிட்டன, அதற்கேற்ப நமது சிந்தனை இருக்க வேண்டும். உலகின் போக்கை தொழில்நுட்பங்கள்தான் தீர்மானிக்கின்றன.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை சமூக நீதியின் அளவுகோலாக பார்க்கிறோம், அதனால் புதிய தொழில்களை ஊக்குவிக்கிறோம். தமிழகத்தில் 2030க்குள் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பினை 1 டிரில்லியன் டாலராக உயர்த்த உறுதியேற்றுள்ளேன். இது சாத்தியமாக ஆயிரக்கணக்கான புத்தொழில் நிறுவனங்கள் உருவாக வேண்டும். அவை வெற்றி பெற்று பல லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும், இந்த முயற்சிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும்" என தெரிவித்தார்

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close