ஆரணியில் கல்லூரி மாணவர்களை அரசு பேருந்தில் பயணச்சீட்டு எடுக்க கூறிய நடத்துநரை கண்டித்து காவல் நிலையம் முன்பு கல்லூரி மாணவர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி டவுன் மற்றும் சுற்றி வட்டார பகுதியான வடுகசாத்து, சேவூர், தச்சூர் உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் செய்யார் அரசு கலை க்கல்லூரியில் பயின்று வருகின்றனர். மேலும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய அடையாள அட்டை போதுமானது என்று அரசு அறிவித்துள்ளது. ஆரணியிலிருந்து செய்யாருக்குச் செல்ல போதிய பேருந்து வசதியில்லை என்று கல்லூரி மாணவர்கள் பல முறை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்
இந்நிலையில் இன்று மாலை ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் 8ம் நம்பர் கொண்ட ஆரணி தேவிகாபுரம் மார்க்கமாக செல்லும் அரசு பேருந்தில் செய்யார் கல்லூரி மாணவர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அப்போது கல்லூரி மாணவர்களை பேருந்து பயண சீட்டு எடுக்க சொல்லி, நடத்துநர் மாணவர்களிடம் கூறியுள்ளார்.
அப்போது கல்லூரி மாணவர்கள் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உரிய அடையாள அட்டை உள்ளது என்றும் எதற்கு பயண சீட்டு எடுக்க வேண்டும் என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பேருந்தின் ஒட்டுநர் பேருந்தை ஆரணி நகர காவல் நிலையம் முன்பு நிறுத்தினார். இந்நிலையில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் திடிரென ஆரணி நகர காவல் நிலைய முன்பு மறியல் செய்ய முயன்றனர்.
அப்போது ஆரணி நகர காவல்துறை உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மாணவர்களை எச்சரித்து, அரசு பேருந்து நடத்துநரிடம் ‘இன்று ஒரு நாள் கல்லூரி மாணவர்களை பயண சீட்டு கேளுங்கள். ஆனால் நாளை கல்லூரி நிர்வாகத்திடம் அணுகி பிரச்சனையை முடித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி அறிவுறுத்தி அனுப்பினார். இதனால் காவல் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய செய்தி: ‘குழந்தைகளுக்கு தடுப்பூசி போட ஊழியர்களுக்கு பயிற்சி தரவும்’- மத்திய அரசு அறிவுரை
Loading More post
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
வருகிறது புது அப்டேட்! ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வாட்ஸ்அப் திட்டம்!
அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இதை செய்யட்டும்... ராஜஸ்தான் முதல்வர் சவால்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?