பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘’ஜனவரி 11ஆம் தேதிமுதல் 13ஆம் தேதிவரை சென்னையிலிருந்து மொத்தம் 10,300 பேருந்துகள் இயக்கப்படும். அதாவது மூன்று நாட்களிலும் சென்னையிலிருந்து ஒரு நாளைக்கு 4000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படும். சென்னை தவிர பிற ஊரிகளில் இருந்து ஜனவரி 11ஆம் முதல் 13ஆம் வரை 6,468 பேருந்துகள் இயக்கப்படும்.
அதேபோல், பொங்கல் முடிந்து சொந்த ஊர் திரும்ப ஏதுவாக மொத்தம் 16,709 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். டெண்டர் பெறப்பட்ட மோட்டல்களில்தான் அரசு பேருந்துகளை நிறுத்தமுடியும். அதேசமயம் சாலையோர மோட்டல்களில் உணவின் தரம் குறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக உணவின் தரம், சுகாதாரப் பிரச்னைகள் குறித்து புகார்கள் உறுதி செய்யப்பட்டால் டெண்டர் ரத்துசெய்யப்படும்’’ என்று தெரிவித்தார். மாணர்வர்கள் படிக்கெட்டுகளில் பயணம் செய்வது குறித்து கேட்டபோது, ஆபத்தான முறையில் படிக்கெட்டில் பயணிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?