[X] Close

ஓடிடி திரைப்பார்வை 13: நவீன கொத்தடிமைகளைப் பற்றி பேசும் '7பிரிஸனர்ஸ்' திரைப்படம்

சிறப்புக் களம்

7-Prisoners-movie-review-available-in-netflix

கடந்த நவம்பர் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் '7பிரிஸனர்ஸ்'. பிரேசில் நாட்டு திரைப்படமான இதை அலெக்ஸாண்ட்ரே மொராட்டோ (Alexandre Moratto) இயக்கியுள்ளார். நவீன கொத்தடிமைத்தனத்தின் வீரியம் குறித்து பேசும் இந்த படம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது.

18 வயதான மேட்டஸ் (Mateus) ஏழ்மையில் தவிக்கும் தனது குடும்பத்தை பொருளாதார ரீதியில் மீட்டெடுக்க மற்ற சில நண்பர்களுடன் இணைந்து கிராமத்திலிருந்து நகரத்துக்கு பணி நிமித்தமாக பயணிக்கிறான். வறுமையில் உழலும் தன் குடும்பத்தை மேட்டஸின் தாய் தான் அதுவரை தூக்கி நிறுத்துகிறார். அதையடுத்து குடும்பத்தின் பொருளாதாரத்தை தன் தோளில் சுமக்கும் நிலைக்கு மேட்டஸ் தள்ளப்படுகிறார்.

ஆகவே, தரகர் ஒருவர் மூலமாக பிரேசிலின் ஸா பாலோ (São Paulo)நகரில் வேலைக்கு சேர்கிறார். அவருடன் மற்ற 3 பேரும் இணைந்து பணியைத் தொடர்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு கதைகள் இருக்கின்றன. கூடவே அதற்கான தேவைகளும் இருக்கவே செய்கின்றன.


Advertisement

7 Prisoners (2021) - IMDb

தொடக்கத்தில் பிரச்னையில்லாமல் செல்லும் வேலை அடுத்தடுத்த நாட்களில் சிக்கலை ஏற்படுத்துகிறது. வேலைக்கு உரிய ஊதியம் கிடைக்காமல், கொத்தடிமைகளாக தாங்கள் நடத்தப்படுவதை உணர்ந்தவர்கள், கிளர்ந்து எழுகின்றனர். அவர்களுடன் மேலும் 3 பேரும் இணைந்துகொள்ள இறுதியில் என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது '7பிரிஸனர்ஸ்' திரைப்படம்.சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும், தொழிலாளர்கள் சுரண்டல்களையும் காட்சிபடுத்துவதோடு வேலை முடிந்துவிட்டது என படம் வழக்கமான புள்ளியில் முடிவடையவில்லை.

கூடுதலாக மிக முக்கியமான தற்கால கொத்தடிமைத்தனத்தின் நிலையையும் படம் பேசுகிறது. தொழிலாளர்களுக்கு எதிராக தொழிலாளரை ஏவி, 'விடுதலை'யை ஒடுக்கும் முறையை கையாளும் அதிகார வர்க்கத்தை தோலுரிக்கிறது படம். பொருளாதாரத்தின் மீதான தனிமனிதனின் சறுக்கல், மற்றவர்களை பணயம் வைப்பது குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.

image

உலகெங்கிலும் உள்ள மக்களைச் சுரண்டும் உலகளாவிய நுகர்வு கலாசாரத்தின் பாதிப்புகளையும், கொத்தடிமைத்தனத்தின் கொடுமைகளையும், பொருளாதார சீர்திருத்தத்தின் தேவை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. எல்லா குற்றவாளிகளுக்கும் ஒரு பின்கதை இருப்பதைப்போலத்தான், இந்த படத்திலும் முதலாளிக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கவே செய்கிறது. நகரம் முழுவதுமே கொத்தடிமைத்தனம் வேர்விட்டு பரவியிருப்பதையும், பெரிய நெட்வோர்க்கிங் பிஸினஸாக மாறியிருப்பதையும் பேசியிருப்பது சிறப்பு.

Rodrigo Santoro & Alexandre Moratto Interview: 7 Prisoners

ஒரு நாள் முழுவதும் அரைகுறை உணவை உண்டு உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பை எந்தவித சிரமுமின்றி சுரண்டு, உண்டு, வாழ்வை அனுபவிக்கும் முதலாளி 'லூகா' முதலாளித்துவத்தின் மொத்த உருவத்தின் பிரதிபலிப்பு. முதலாளி லூகாவை பொறுத்தவரை அவர் பெரிய சுரண்டல் பிரமிடின் ஒரு நடுத்தர புள்ளி மட்டுமே. அவருக்கு மேல் அந்த பிரமிடின் கூறுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆண்கள் மட்டுமல்லாமல், பெண்களும் கொத்தடிமைகளாவும், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்படுவதையும், வர்க்க பாகுபாடுகள் உலகெங்கிலும் கெட்டிப்பட்டு கிடப்பதையும் பதிவு செய்யும் விதத்தில் '7பிரிஸனர்ஸ்' ஈர்க்கிறது. சுயநலங்களால் சூழ்ந்தது தான் உலகம் என்பதையும், கார்பரேட் யுக்தியை படத்தில் நுழைத்திருக்கும் விதம் பாராட்டப்பட வேண்டியது. படத்தின் இறுதிகாட்சி எதார்த்ததிற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதை உணர முடிகிறது. 

7 Prisoners Cast: Every Main Performer and Character in the Netflix Movie

முதன்மை கதாபாத்திரமான மேட்டஸ் (Mateus)நடிப்பு மட்டுமல்லாமல், உடன் நடித்திருக்கும் சிறுவர்களின் நடிப்பும் பாராட்ட வைக்கிறது. லூகா கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரோட்ரிகோ சாண்டோரோ(Rodrigo Santoro)அசத்தியிருக்கிறார். எந்த இடத்திலும் நடிப்பில் துருத்தலோ, நெருடலோ தென்படவில்லை. ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

image

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், முதலாளித்துவத்தின் சூழ்ச்சிகளையும், அதன் மூலம் தான் நினைத்ததை சாதிக்கும் அதிகாரவர்க்கத்தின் அரசியலையும் புரிந்துகொள்ள நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் படைப்புதான் ''7பிரிஸனர்ஸ்'

ஓடிடி திரைப்பார்வையின் முந்தைய அத்தியாயம் : ஓடிடி திரைப்பார்வை 12 : நல்ல காட்சி அனுபவத்தைக் கொடுக்கும் ‘கயமை கடக்க’.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close