Published : 08,Dec 2021 10:08 AM

வயதான தம்பதியை தாக்கி நகை பணம் கொள்ளை: ஆரணி போலீசார் விசாரணை

attack-on-elderly-couple-and-rob-them-of-jewelery-Arani-police-enquiry

பெரியபாளையம் அருகே வயதான தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஆரணி மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜடராயன் (62).இவரது மனைவி சுலோச்சனா (58). இவர்கள் இருவரும் இரவு தூங்கி கொண்டிருந்தபோது, வீட்டின் கேட்டை இரும்புக் கம்பியால் உடைத்த கொள்ளையர்கள், வீட்டினுள் பீரோவில் இருந்த ₹22,000 பணத்தை எடுத்துள்ளனர்.

அப்போது, சத்தம் கேட்டு எழுந்த ஜடராயனை, இரும்புக் கம்பியால் கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவர் நிலைகுலைந்து கீழே விழ, அலறல் சத்தம் கேட்டு எழுந்து வந்த அவரது மனைவி சுலோச்சனாவையும் தாக்கி அவரது கழுத்தில் அணிந்திருந்த 4.5 சவரன் தாலி செயினையும் பறித்துச் சென்றனர்.

image

வயதான தம்பதியினர் இருவரும் கூச்சலிடவே, முதல் மாடியில் உறங்கி கொண்டிருந்த ஜடராயனின் மகள் சுஜிதா (31), மருமகன் சரவணன் ஆகியோர் ஓடி வருவதை கண்ட கொள்ளையர்கள் அங்கிருநது தப்பினர். இதையடுத்து உடனடியாக காயமடைந்த இருவரையும் மீட்ட உறவினர்கள், பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர், ஆரணி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனைத்தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிகாலை 3 மணியளவில் 3 பேர் கொண்ட கொள்ளையர்கள் வயதான தம்பதியினரின் வீட்டில் புகுந்து இருவரையும் தாக்கி 4.5 சவரன் நகை, ₹22,000 பணம் கொள்ளையடித்து சென்றதாகவும், கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

இதனிடையே தடவியல் வல்லுநர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஆரணி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்