Published : 03,Dec 2021 12:11 PM
டாஸ்மாக் செயல்படும் நேரம் மாற்றம் - தமிழக அரசு

டாஸ்மாக் மதுக்கடைகள், மதுக்கூடங்கள் இனி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை தமிழக அரசு குறைத்தது. அதன்படி, கடந்த ஜூலை மாதம் முதல் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை செயல்பட்டுவந்த நிலையில் மீண்டும் பழைய நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, டாஸ்மாக் கடைகள் வருகின்ற 5ம் தேதி முதல் "பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி" வரை செயல்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.