Published : 16,Nov 2021 12:22 PM

அரியலூர்: திருமணம் செய்து கொள்வதாக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

Ariyalur-A-youth-was-arrested-for-sexually-abusing-a-student-for-marrying-him

அரியலூரில் பள்ளி மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி அடிக்கடி பள்ளிக்கு வரவில்லை என ஆசிரியர் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

image

இதையடுத்து நடந்த விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஹரிஸ் என்பவர் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கடந்த மாதம் 13-ஆம் தேதி இருவரும் வீட்டில் இருந்ததை மாணவியின் தந்தை பார்த்த நிலையில், அரியலூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஹரிஸ் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்