திருநெல்வேலி தச்சநல்லூரில் வீட்டிற்குள் புகுந்த காட்டு உடும்பை, தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
நெல்லை மாநகர் தச்சநல்லூர் வடக்கு தெருவில் வசிப்பவர் சீனிவாசன், இவரது வீட்டில் மதிய வேளையில் காட்டுப் பகுதியில் சுற்றி திரியும் வன விலங்கான உடும்பு வீட்டிற்குள் புகுந்து விட்டது. உடனடியாக அவர் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் வனவிலங்குகளை பாதுகாப்புடன் மீட்கும் உபகரணங்களைக் கொண்டு உடும்பை பத்திரமாக உயிருடன் பிடித்தனர். பிடிபட்ட உடும்பு மூன்று அடி நீளமும், 25 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. 8 அல்லது 9 வயது இருக்கும் பெண் உடும்பு என்பதும் தெரிய வந்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் கொண்டு வந்த கயிறுகளை கொண்டு உடும்பின் இரண்டு இடங்களில் பத்திரமாக கட்டிய வீரர்கள், தீயணைப்பு துறை வாகனத்தில் பத்திரமாக வனத்துறை அலுவலகம் கொண்டு சென்றனர். அதன்பின், வனத்துறை அதிகாரிகளிடம் உரிய தகவலை கூறி உடும்பை பத்திரமாக ஒப்படைத்தனர். பிடிபட்ட உடும்பை வனப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டு விட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனைப்படிக்க...டெல்லி: தீபாவளி முடிந்து 2 நாட்களாகியும் மோசமான அளவில் காற்று மாசு
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்