[X] Close

தீபாவளி பர்சேஸ்: இளைஞர்களை கவரும் லைக்ரா சட்டை, 6 பாக்கெட் பேண்ட், கலர்புல் ஜரிகை வேட்டி!

வீடியோ ஸ்டோரி

தீபாவளி பண்டிகையையொட்டி, இந்த ஆண்டு ஆண்களுக்கான ஆடைகளில் பலவித ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்த வருடம் ஆண்களுக்கான ஆடையில் பல வடிவமைப்புகளில் குவிந்து கிடக்கிறது. அவற்றில் குறிப்பாக குர்தா, ஷெர்வானி மற்றும் பைஜாமாக்கள் குவிந்துள்ளது. இவற்றில் குர்தாவுக்கு முக்கிய இடம் உண்டு. அந்தவகையில் இந்த தீபாவளிக்கு பேசிக் டோத்தி குர்தா, நேரு ஜாக்கெட், பிரிண்டட் அண்ட் ஜாக்கெட் குர்தாக்களில் புது டிசைன்கள் வந்துள்ளன. அதே போல ஷெர்வானி, பைஜாமா, கலம்கரி, லாங் சார்ட், ஷார்ட் சார்ட், பார்ட்டி வியர்-னு ஆண்களுக்கான பொதுவான வகைகளில் இந்த முறை எண்ணற்ற வண்ணங்களில் ஏராளமான ஆடைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

தொடர்புடைய செய்தி: தீபாவளி : சந்தைக்கு புதுவரவாக வந்துள்ள புடவை ரகங்கள்!


Advertisement

இளைஞர்களை கவரும் வகையில் லைக்ரா சட்டைகள் அதிகமாக விற்கப்படுகிறது. போலவே பாரம்பரிய வேட்டி, சட்டைகள் பட்டையை கிளப்பி வருகிறது. புதுரக ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் மாடல்களும் வேகமாக விற்கப்படுகிறது. இந்த வருடம், 6 பாக்கெட் பேண்ட்கள் சந்தைக்கு வந்திருக்கிறது.

image

இப்படியாக இந்த ஆண்டு அதிக ரகங்களில் ஆடைகள் வந்துள்ளதாக சொல்கிறார் சென்னையை சேர்ந்த ஆடை விற்பனையாளர் கார்த்திக். வழக்கம் போல இந்த ஆண்டும் ஆண்களுக்கான ஆடையில் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் மாடல்கள் இந்த முறையும் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றன. 6 பாக்கெட் பேண்ட் இந்த தீபாவளிக்கு புதுவரவு என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். எப்போதும் ஆண்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் வேட்டி, சட்டைக்கு இந்த முறையும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பல வண்ண ஜரிகைகளில் விதவிதமான வேட்டிகளும் அதற்கு இணையாக சட்டைகளும், முகக் கவசங்களும் கிடைக்கின்றன.


Advertisement

image

நீங்கள் இன்னும் ஆடை வாங்கவில்லை என்றால், மேற்கூறிய ஆடைகளை இந்த ஆண்டு வாங்கி ட்ரை பண்ணுங்க! ஒருவேளை உங்களுக்கான ஆடைகளை ஏற்கெனவே வாங்கிருந்தா, அந்த அனுபவத்தையும் இந்த ஆண்டு நீங்கள் சிறப்பானதாக நினைக்கும் ஆடை வகையையும் கமெண்டில் எங்களுக்கு சொல்லுங்க.


Advertisement

Advertisement
[X] Close