இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நாட்டுமக்களிடம் உரையாற்றினார்.
’’257 நாட்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா கடினமான இலக்கை எட்டியுள்ளது. நாட்டு மக்கள் அனைவரின் கூட்டு முயற்சியால்தான் இது சாத்தியமானது. 100 கோடி டோஸ் தடுப்பூசி என்பது ஒரு புதிய சாதனையின் தொடக்கம். நேற்று மிகப்பெரிய சாதனை படைத்து நாம் புதிய சரித்திரம் படைத்துள்ளோம். உலக அளவில் தடுப்பூசிகள் செலுத்த தொடங்கியபோது பெரும் மக்கள்தொகையை கொண்ட இந்தியா எப்படி தடுப்பூசிகளை பெறுவார்கள், எப்படி செலுத்துவார்கள் என இந்தியா குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. எழுப்பப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் 100 கோடி டோஸ் தடுப்பூசி சாதனை பதிலளித்துள்ளது.
தடுப்பூசிகள் செலுத்தத் தொடங்கியபோது முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை என்பதை தவிர்த்தோம். கடைக்கோடி மக்களுக்கும் தடுப்பூசி செல்வதை அரசு உறுதி செய்தது. அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற திட்டத்தை கொண்டுவந்து இந்த சாதனையை எட்டியுள்ளோம். தற்போது இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. புதிய இந்தியாவின் விடாமுயற்சி, நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றிதான் இந்த பரிசு. கடுமையான சோதனைக்கிடையே இது இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பாக மாற்றப்பட்டது.
உலக அளவில் மருந்து தயாரிப்பில் இந்தியாவுக்கு சிறப்பு இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் முற்றிலும் அறிவியல் அடிப்படையில் வகுக்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். கோவின் இணையதளம் தடுப்பூசி திட்டத்தை மக்களிடம் மிக எளிதாக கொண்டுசேர்த்தது. கொரோனா தாக்கத்தால் துவண்டுவிடாமல் நாட்டின் வளர்ச்சிகான திட்டங்களையும் செயல்படுத்தினோம். விவசாயம், சுற்றுலா, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினோம். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் எளிய மனிதர்களின் தயாரிப்புகளை வாங்குவதிலும் ஆர்வத்தை வளர்த்துள்ளோம். நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி நம் மக்களை பாதுகாத்துள்ளது; இனிவரும் காலங்களிலும் பாதுகாப்பை உறுதிசெய்யும். கொரோனா எனும் பெரும்துயரத்தை சந்தித்த நாம் எந்த துயரையும் சந்திக்கும் வலிமை பெற்றுள்ளோம். இனிமேல் வீட்டிலிருந்து வெளியேறும்போது காலணி அணிவதுபோல், முகக்கவசம் அணிவதையும் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
இந்தியா: நேற்றைவிட கணிசமாக குறைவு - புதிதாக 15,786 பேருக்கு கொரோனா
விளக்கு ஏற்றுவது, கைதட்டி ஒலி எழுப்புவது எப்படி பயனளிக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அந்த முயற்சிகள் எல்லாம் மருத்துவத்துறைக்கு உற்சாகத்தை அளித்தது’’ என்று நாட்டுமக்களிடம் உரையாற்றினார் மோடி.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்