Published : 18,Aug 2017 04:14 AM

பார்சிலோனாவில் பயங்கரவாதிகள் அட்டாக்: 13 பேர் பலி

Deadly-Van-Attack-in-Barcelona--13-Dead

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 15 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது.

பார்சிலோனா நகரின் மையப்பகுதியில் உள்ள லாஸ் ராம்பலாஸ் என்ற சுற்றுலா தலத்தில் மக்கள் நேற்று அதிகளவில் கூடி இருந்தனர். அப்போது திடீரென கூட்டத்தில் வேன் ஒன்று புகுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். வேன் மோதியதில் 13 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பார்சிலோனாவின் அருகே உள்ள காம்ப்ரில்ஸ் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த பகுதியை முற்றுகையிட்ட போலீசார், சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். சில மணிநேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்