Published : 04,Oct 2021 04:10 PM
பிரதமர் மோடியுடன் எல்.முருகன் சந்திப்பு - திருக்குறள் புத்தகம் பரிசளிப்பு

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தமிழகத்தை பிரதிபலிக்கும் வகையில் அவருக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி முருகன் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று நேரடியாக சந்தித்த எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமரிடம் வாழ்த்து பெற்றார்.இந்த சந்திப்பின்போது பிரதமருக்கு நினைவு பரிசாக திருக்குறள் புத்தகத்தை முருகன் வழங்கினார்.