[X] Close

உத்தரகாண்ட்: பதஞ்சலி குருகுலத்தில் இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

இந்தியா

Woman-jumps-to-death-in-Patanjali-gurukul-in-Uttarakhand
உத்தரகாண்டில் உள்ள பதஞ்சலி குருகுலத்தில் தங்கியிருந்த இளம்பெண் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரகாண்டின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள பகதராபாத் நகரில் பதஞ்சலி குருகுலம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த குருகுலத்தில் தங்கியிருந்த 24 வயது நிரம்பிய பெண் ஒருவர், கட்டிடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து நேற்று அதிகாலையில் கீழே குதித்துள்ளார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர், அப்பெண் தங்கியிருந்த அறையில் இருந்து ஒரு கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
 
அந்தக் கடிதத்தில் அவரது ஆன்மீக அனுபவங்கள் மட்டுமே இருந்ததாகவும், தற்கொலை செய்து கொண்டதற்கான தெளிவான காரணம் குறித்து எதுவுமில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். இளம்பெண் தற்கொலை குறித்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.
 
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


Advertisement

Advertisement

Advertisement
[X] Close