ஆட்சியில் இருப்பவர்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல நடந்து கொள்கின்றனர். அவர்களின் தலைக்கனத்தை இறக்கி வைக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது என அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக அம்மா அணி சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், ’தேர்தல் ஆணையத்தில் பொதுச்செயலாளர் சசிகலாதான் என அபிடவிட் தாக்கல் செய்தவர்கள்தான் தற்போது அவரது பதவி செல்லாது, துணைபொதுச்செயலாளர் பதவி செல்லாது என தீர்மானம் போட்டு அவசர அவசரமாக 27 பேர் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள். அது சட்டப்பட்டி குற்றம். நான் 23 ஆண்டுகளாக அம்மாவின் பின்னாலிருந்து அரசியல் கற்றவன். சோதனைகளை கடந்து வந்தவன். என்னிடமிருந்து நிதானமாகத்தான் வார்த்தைகள் வரும். ஆட்சியில் இருப்பவர்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல நடந்து கொள்கின்றனர். அவர்களின் தலைக்கனத்தை இறக்கி வைக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு இதே மதுரையில் ஆட்சியில் இருப்பவர்களின் சார்பில் அரசு விழாவாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதே.. அப்போது இந்த எழுச்சியை காணமுடிந்ததா? பயனாளிகள் என்ற பெயரிலே பள்ளி மாணவமாணவிகளை அழைத்து வந்திருந்தார்கள். இது கூட்டி வந்த கூட்டமா? தானாக வந்த கூட்டமா? நாங்கள் எல்லாம் அமைச்சர்களா? கட்சியின் தொண்டர்கள்’ என்றார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!