Published : 23,Sep 2021 08:43 AM
மதுரை: வாகன தணிக்கையில் சிக்கிய கள்ள நோட்டுகள் - 10 பேர் கைது

மதுரையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளிக்குடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் வந்து கொண்டிருந்த கார்களை சோதனைக்கு உட்படுத்தினர். அதில், இரண்டாயிரம், 500 மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், கார்களில் வந்திருந்த 10பேரிடம் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், கள்ளிக்குடி காவல் நிலையத்தில் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த யோகராஜ், சுனில்குமார், அன்பரசன், அக்பர், தண்டீஸ்வரன், சரவணன், ரமேஷ், பொன்ராஜ் உள்ளிட்டோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிக்க: தன்பாலின உறவுக்கு இணங்கமறுத்த 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்