[X] Close

‘கேப்டன்சி பதவி’ கோலி தானாக முடிவு எடுக்கிறாரா.. சூழலின் அழுத்தம் காரணமா?- என்ன நடக்கிறது?

சிறப்புக் களம்

Virat-Kohli-Stepped-down-from-Team-Indian-T20I-Captaincy-and-what-next-in-Indian-Cricket-Team-and-who-will-be-the-Next-Captain-of-the-Team

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் இப்போது வைரல் டாக்காக இருப்பது இந்திய கேப்டன் விராட் கோலி, டி20 கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அவரது முடிவு தான். கோலியின் இந்த திடீர் முடிவுக்கு பலரும் பல விதமான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.  


Advertisement

image

அத்துடன், ஐபிஎல் களத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நடப்பு சீசனுடன் விலகுவதாக கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி அவர் தெரிவித்துள்ளார்.  


Advertisement

‘கோலியின் கேப்டன்சி பதவிக்கு அபாயம் வந்துள்ளதால், டி20 கிரிக்கெட்டில் அவராக விலகியுள்ளார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அணியை வழிநடத்தும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளார்!’, ‘உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இப்படி சொல்லி உள்ளது ஒரு முன்னெச்சரிக்கையான முடிவு. இந்தியா கோப்பையை வெல்ல தவறினால் அதற்கு கோலி எந்தவித எதிர்வினையும் ஆற்ற தேவையில்லை’, ‘தானாகவே அவரது ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பும் பறிக்கப்படும்!’ என்பது மாதிரியான பேச்சுகள் எழுந்துள்ளன. 

image

இந்த முடிவு குறித்து கோலி சொன்னது என்ன? 


Advertisement

“பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன். கடந்த 8 - 9 வருடங்களாக மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறேன். 5 - 6 வருடங்களாக அணியை கேப்டனாக வழிநடத்தியும் வருகிறேன். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அணியை திறம்பட வழிநடத்த வேண்டுமென்ற யோசனையில் இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது ஆற்றல் அனைத்தையும் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட்ட போது அர்பணித்துள்ளேன். கேப்டனாக இல்லை என்றாலும் அணியில் பேட்ஸ்மேனாக தொடர விரும்புகிறேன். 

இந்த முடிவை எடுக்க எனக்கு நீண்ட நாள் தேவைப்பட்டது. ஆழ்ந்த சிந்தனை மற்றும் நீண்ட ஆலோசனைக்கு பின்னதாக இந்த முடிவை எடுத்துள்ளேன். குறிப்பாக எனக்கு மிகவும் நெருக்கமான அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் ரோகித் ஷர்மாவுடன் இது தொடர்பாக பேசிய பிறகே இந்த முடிவை எடுத்தேன். எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறேன். 

இந்திய கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து சேவை புரிவேன். அணிக்காக எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என கோலி தனது கேப்டன் பதவி விலக கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

image

கேப்டனாக கோலியின் செயல்பாடு எப்படி?

65 டெஸ்ட் போட்டிகள், 95 ஒருநாள் போட்டிகள், 45 டி20 போட்டிகளில் இந்திய அணியை கோலி கேப்டனாக வழி நடத்தியுள்ளார். அதில் டெஸ்டில் 38 வெற்றிகளும், ஒருநாள் கிரிக்கெட்டில் 65 வெற்றிகளும் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 27 வெற்றிகளும் இந்தியா பெற்றுள்ளது. அவரது வின்னிங் பர்சன்டேஜும் சிறப்பாக தான் உள்ளது. 

2014 முதல் இந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் வழிநடத்தி வரும் கோலி, கடந்த 2017 முதல் தான் இந்தியாவை டி20 கிரிக்கெட்டில் வழிநடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அவரது ஆட்டம் வேற லெவலில் இருந்துள்ளது. அது டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சூப்பராக உள்ளது.

இந்திய கேப்டன்களில் இந்தியாவை அதிக டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி சென்றுள்ள கேபடன்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் கோலி தான். இந்த நிலையில் தான் டி20 கேப்டன்சி பொறுப்பை அவர் துறந்துள்ளார். 

image

அணியின் வெற்றியில் கேப்டனின் பங்கு எந்தளவுக்கு முக்கியம்?

கிரிக்கெட் விளையாட்டில் டீம் வொர்க் மிகவும் முக்கியம். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் இணைந்து வெற்றிக்காக போராட வேண்டி இருக்கும். வெற்றி மற்றும் தோல்விகளில் கேப்டனின் பங்கு, ஐந்தில் ஒரு பங்கு தான். மற்ற அனைத்தும் அந்த டீம் வொர்க்கில் தான் அடங்கியுள்ளது. 

இருந்தாலும் எந்த பவுலரை எப்போது பயன்படுத்துவது, ஃபீல்ட் செட்டிங், பேட்டிங் ஆர்டர் என ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப வியூகம் அமைத்துக் கொடுப்பது கேப்டனின் பணி. அந்த வியூகங்கள் வெற்றிக்காக வித்திடப்படும் விதைகள். 

image

கோலி இனி!

கோலி தற்போது டி20 கிரிக்கெட் கேப்டன் பொறுப்பை தான் துறந்துள்ளார். அதே நேரத்தில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பை தன்வசம் தக்கவைத்துள்ளார். இதை கடந்த முறை இந்திய அணிக்கு மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருந்த தோனியும் செய்துள்ளார். ஆனால் அவர் முதலில் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இருந்தார். அதன் பிறகு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை வழி நடத்தி வந்தார். அப்போதும் இதே மாதிரியான விமர்சனங்கள் தோனி, கேப்டன்சி பொறுப்பின் மீது வைக்கப்பட்டன. அதே தான் இப்போது கோலிக்கும் நடந்து வருகிறது. 

அவர் ஒரு மன கணக்குடன் டி20 கிரிக்கெட் கேப்டன் பொறுப்பை துறந்துள்ளார். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன திட்டம் வைத்துள்ளது என்பது சஸ்பென்சாக உள்ளது. ஒருவேளை இந்தியா டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வெல்ல தவறினால் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் கோலியை பிசிசிஐ நீக்கலாம். 2023 - 50 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. அதை பிசிசிஐ கருத்தில் கொள்ளும். 

image

அடுத்த கேப்டன் யார்? 

கோலிக்கு மாற்றாக இந்தியாவை அணியின் சீனியர் வீரரான ரோகித் ஷர்மா வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ இளம் வீரருக்கு அந்த பொறுப்பை கொடுக்க எண்ணினால் அது கே.எல். ராகுல், ஷ்ரேயஸ் ஐயரிடம் கொடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ரேஸில் பண்ட் உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அவர் டெல்லி அணியை நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வெல்ல செய்தால் இந்திய அணிக்கான கேப்டனுக்கான பரிசீலனையில் பண்ட் பெயரும் இருக்கும். முதலில் துணைக் கேப்டன் பொறுப்பை கொடுத்து பின்னர் தயார் செய்து கேப்டன் பொறுப்பை நோக்கி நகர்த்துவார்கள். 

என்ன நடக்கிறது என்பது எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னதாக தெரிந்துவிடும். அதுவரை காத்திருப்போம்.


Advertisement

Advertisement
[X] Close