Published : 20,Sep 2021 08:30 AM
காபூல் மாநகராட்சியில் பெண் ஊழியர்கள் பணிக்கு வர தடை

ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மாநகராட்சிப் பெண் ஊழியர்கள் பணிக்கு வருவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
பள்ளிகளுக்கு ஆண்கள் மட்டும் வந்தால் போதும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சியில் பெண்களால் மட்டுமே செய்ய முடியும் என்பன போன்ற பணிகளை மேற்கொள்வோர் மட்டும் வேலைக்கு வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காபூல் நகரின் இடைக்கால மேயர் ஹம்துல்லா நமோனி இது தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ‘iOS 15’-ஐ அப்டேட் செய்து கொள்ள ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தல்