[X] Close

காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை; அம்மா உணவகமே சாட்சி - பேரவையில் ஸ்டாலின் பதில்

தமிழ்நாடு

admk-walk-out-from-assembly-due-to-jayalalithaa-university-issue

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


Advertisement

சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அண்ணாமலை பல்கலைகழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், 'காழ்புணர்ச்சியுடன் அரசு செயல்படுகிறது' என குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், 'அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை. அம்மா உணவகம் செயல்படுவதே இதற்கு உதாரணம்' என்று விளக்கமளித்தார்.

image


Advertisement

விவாதத்தின் இறுதியாக அரசின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''விழுப்புரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைகழகத்தை தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைப்போம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளோம். கல்வியில் புரட்சியை ஏற்படுத்திய ஜெயலலிதாவுக்கு பல்கலைகழகம் ஆரம்பித்தோம். ஆளுநரும் அதற்கு அனுமதியளித்தார். தேர்தல் அறிவிக்கப்பட்டதால், முழுமையாக பல்கலைகழகத்தை நிறுவ முடியவில்லை. ஆனால், அதற்கு தற்போதிருக்கும் அரசு மறுத்துள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அரசு செயல்படுகிறது'' என்று தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close