[X] Close

விரைவில் ஒன்றுபட்ட அதிமுக: முதலமைச்சர் பேட்டி

Aiadmk-merger-on-the-cards-again

அதிமுக அணிகள் விரைவில் இணையும் என்றும் விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவை பார்க்கலாம் என்றும் முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி கூறினார்.


Advertisement

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திமுகவைச் சேர்ந்த சுமார் 250 பேர் அதிமுகவில் இன்று இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் இதைத் தெரிவித்தார். 
அவர் மேலும் கூறும்போது, ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு முயற்சி செய்து வருகிறது. நீட் பிரச்சினையில் தமிழக மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும். அ.தி.மு.க. அணிகள் விரைவில் இணையும். விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவை பார்க்கலாம். சட்டசபையில் முக்கிய பிரச்சினைகளை பேசவில்லை என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி இருக்கிறார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு தகுந்த பதில் அளித்துள்ளோம். அவர் சபைக்கு வந்திருந்தால் இப்படி கூறியிருக்க மாட்டார்’ என்றார். 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close