[X] Close

உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடும் எண்ணம் இல்லை - அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்

தமிழ்நாடு

No-intention-to-postpone-local-Body-elections-in-TN-says-TN-Rural-Development-Minister-KR-Periyakaruppan

உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடும் எண்ணம் இல்லை என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 


Advertisement

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. எனவே தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். மாநில தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் தேர்தலை தள்ளிப் போடும் எண்ணம் இல்லை. 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பேரவைத் தேர்தல் நடைபெறும் போது தேர்தல் வாக்குறுதியாகவும் திமுக சொல்லியிருந்தது.

கொரோனா பேரிடர் காலத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் பங்கும் மிக முக்கியமானதாக இருந்தது. அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால்தான் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியாக இருக்க முடியும்” என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close