[X] Close

ஓடிடியில் பா.ரஞ்சித்தின் 'சார்பட்டா பரம்பரை': ரிலீஸ் தேதி அறிவிப்பு

சினிமா

director-pa-ranjith-s-Sarpatta-Parambarai-movie-streaming-on-Prime-Video-from-July-22nd--

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ ஓடிடியில் வெளியாகும் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.


Advertisement

‘காலா’ வெற்றிக்குப்பிறகு, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் என்பதால் ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. நடிகர் ஆர்யா, துஷாரா, கலையரசன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சென்னையில் 90 களில் நடந்த பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்திற்காக, ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, 8 பேக் உடற்கட்டுடன் தன்னை தயார்படுத்தினார். சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கேரக்டர்கள் அறிமுக வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

ஆர்யா கபிலனாகவும், ஜான் கொக்கன் வேம்புலியாகவும், கலையரசன் வெற்றிச்செல்வனாகவும், சந்தோஷ் ராமனாகவும், பசுபதி ரங்கன் வாத்தியாராகவும், துஷாரா விஜயன் மாரியம்மாவாகவும், காளி வெங்கட் கோனி சந்திரனாகவும் படத்தில் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாகவே தயாரிப்பிலுள்ள இந்தப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படாததால் வெளியீடு இன்னும் தள்ளிப்போகும் என்பதால் ஓடிடியை தேர்ந்தெடுத்துள்ளது படக்குழு. வரும் ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர், பா.ரஞ்சித்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close