Published : 04,Jul 2021 08:22 PM

பெரம்பலூர்: இடி தாக்கி 2 பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழப்பு

2-cows-died-after-thunder-hits-in-Perambalur

பெரம்பலூர் அருகே இடிதாக்கியதில் இரண்டு பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, அன்னமங்கலம், எசனை உள்ளிட்ட பகுதிகளில் இன்று பிற்பகலில் பலத்த மழை பெய்தது. இடி மின்னல் காற்றுடன் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதில் எளம்பலூர் சேகர் என்பவருக்கு சொந்தமான இரண்டு பசுமாடுகள் இடிதாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

மேய்ச்சலுக்கு பிறகு கொட்டகையில் மாடுகள் கட்டப்பட்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த இரண்டு மாடுகளின் மதிப்பு 1 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இடி தாக்கி கட்டுத்தரையிலேயே உயிரிழந்து கிடக்கும் பசுமாடுகளை அப்பகுதியினர் சோகத்துடன் பார்த்துச்செல்கின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்