[X] Close

தாய்லாந்து : கோரப்பசி.. வீட்டு சுவரை உடைத்து உணவை எடுத்துக்கொண்ட யானை!

உலகம்,வீடியோ ஸ்டோரி

தாய்லாந்தில் கோரப்பசியில் இருந்த யானை ஒன்று வீட்டு சுவரை உடைத்து உணவை எடுத்துக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement

ஹுவாஹின் பகுதியில் உள்ள வீட்டின் பின்பக்கம் சுவரை அதிகாலை 2 மணிக்கு உடைத்து யானை உணவை தேடியுள்ளது. இந்த சத்தத்தை கேட்ட வீட்டில் இருந்த தம்பதியர் சமையலறைக்கு சென்று பார்த்தப்போது யானையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், யானையை தொந்தரவு செய்யாமல் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். அதேநேரத்தில் யானையும் சமையலறையில் இருந்த அரிசி உள்ளிட்ட உணவை உட்கொண்டு பசியாறிச் சென்றது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close