[X] Close

திருப்பூர்: சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் கழுத்து நெரிக்கப்பட்டு பலி

தமிழ்நாடு,வீடியோ ஸ்டோரி

திருப்பூரில் சேலையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடிய போது, சிறுவன் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

சேலம் மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரன்(36), இவருக்கு செண்பகவல்லி (28) என்ற மனைவியும் குழந்தைகள் மித்ரன்(10), பிரசன்னா(6) ஆகியோரும் உள்ளனர், இவர்கள் பளவஞ்சிபாளையம் சிவசக்தி நகர் பகுதியில் வசித்து வருகிறார்கள்.

மித்ரன் தனது வீட்டில் இன்று மதியம் வழக்கம்போல் ஊஞ்சலில் விளையாடிக்கொண்டு இருந்தபோது, மித்ரன் ஊஞ்சலை சுற்றி விளையாடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சேலை வேகமாக சுற்றியதில் சிறுவன் சிறிதும் எதிர்பாக்காத நிலையில் சேலை அவனின் கழுத்தை சுற்றியுள்ளது. இதனால் கத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்க்க முடியவில்லை.


Advertisement

அதன்பின்பு நீண்ட நேரம் ஆகியும் சத்தம் இல்லை என வெளியே வந்து பார்க்கும் போது சிறுவன் சேலையில் சுற்றி மயக்க நிலையில் தொங்கிக்கொண்டு இருந்துள்ளார். உடனடியாக மித்ரனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி காவல் நிலையப்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close