Published : 11,Jun 2021 09:34 AM
களைக்கட்ட உள்ள யுரோ கால்பந்து போட்டிகள்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்

இன்று தொடங்கும் யுரோ கால்பந்து கோப்பை போட்டிகளை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
கால்பந்து, பாய்ண்ட்ஸ் டேபுள், விசில் என கலர் ஃபுல்லாக இந்த டூடுளை கூகுள் வடிவமைத்துள்ளது. உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு, உலகின் 2 வது மிகப்பெரிய கால்பந்து போட்டியாக யுரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் பார்க்கப்படுகிறன. கொரோனா பெரும்பிணி காரணமாக ஓராண்டு காலம் ஒத்திவைக்கப்பட்ட யூரோ கோப்பை போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. இந்தத் போட்டிகளில் 24 அணிகள் பங்கேற்கின்றன. மைதானங்களில் 25 முதல் 45 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஸ்டேடியோ ஒலிம்பிக்கோ மைதானத்தில் முதல் போட்டி அரங்கேறுகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இத்தாலி அணியும், துருக்கி அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில், இன்று தொடங்கும் யுரோ கால்பந்து கோப்பை போட்டிகளை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.