[X] Close

விரைவுச் செய்திகள்: 11ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு ரத்து | மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம்

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Tamilnadu--India--World-news-till-6-PM

11ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. கொள்குறி முறையில் 11ஆம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 9ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு 11ஆம் வகுப்பில் பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் என்று கூறியுள்ளது.


Advertisement

5 மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம்: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 25 பேரை இடமாற்றம் செய்து தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். மதுரை, சேலம், திருநெல்வேலி, கோவை, திருப்பூர் மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆளுநருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அவருடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஆளுநர் உரை நிகழ்த்தும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை நடத்தினார்.


Advertisement

விரல் துண்டிப்பு - மனித உரிமை ஆணையம் உத்தரவு: தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட சம்பவம் குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் 2 வாரத்தில் விளக்கம் தர மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் காப்பீடு: கொரோனா முன்களப் பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தில் ஒருவர்கூட விடுபடமாட்டார்கள் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உறுதியளித்துள்ளார்.

சிபிஎஸ்இ - புதிய பாடங்கள் அறிமுகம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையில் புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து புதிய பாடப் பிரிவுகள் கற்பிக்கப்படவுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Advertisement

நெல்லுக்கு ஆதார விலை ரூ.72 அதிகரிப்பு: நெல்லுக்கான அடிப்படை ஆதார விலையை குவின்டாலுக்கு 72 ரூபாயாக மத்திய அரசுஅதிகரித்தது. கம்பிற்கு குவின்டாலுக்கு 100 ரூபாய் உயர்த்தப்பட்டு 2,250 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மணிகண்டனை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளது: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைதுசெய்து விசாரிக்க வேண்டியுள்ளதாக நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. மணிகண்டன் மீது துணை நடிகை அளித்த பாலியல் புகார் குறித்த விசாரணையில் இவ்வாறு கூறியுள்ளது.

பட்டாக் கத்தியுடன் ரகளை செய்த நபர்: சென்னையில் குடிபோதையில் பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய நபரை கைதுசெய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கொரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி: தமிழகத்தில் ஊரடங்கு காரணமாகவே கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

தளர்வுகளை தவறாக பயன்படுத்தக் கூடாது: ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முறையான காரணம் இல்லாமல் வெளியே வருவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சருடன் சசிகலா பேச்சு: ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌அதிமுக முன்னாள் அமைச்சர் ஆனந்தனுடன் சசிகலா பேசிய ஆடியோ வெளியானது. கட்சியை வழிநடத்த விரைவில் வருவேன் என சசிகலா மீண்டும் திட்டவட்டமாக கூறியது தெரியவந்துள்ளது.

புதிதாக யாரும் பொதுச்செயலாளர் ஆக முடியாது: அதிமுக பொதுச்செயலாளரை புதிதாக தேர்ந்தெடுக்க தேவை இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். ஈபிஎஸ் -ஓபிஎஸ் தலைமையை மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாக விளக்கமளித்துள்ளார்.

நெல்லையில் ஈபிஎஸ்-க்கு எதிராக போஸ்டர்: ஓபிஎஸ்ஸிடம் ஆலோசிக்காமால் நடந்து கொண்டதால்தான் தோல்வியை சந்தித்தோம் என எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் வகையில் நெல்லையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரசின் ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்தார்: காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா பாரதிய ஜனதாவில் இணைந்தார். உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை: மும்பையில் தென்மேற்கு பருவமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்குள் கடும் சண்டை: பொலிவியா நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close