[X] Close

இதுவே என் பிறந்தநாளுக்கு நீங்கள் தரும் பரிசு - ரசிகர்களுக்கு அன்பு கட்டளை போட்ட கார்த்தி

சினிமா,கொரோனா வைரஸ்

Actor-Karthi-celebrates-his-44th-birthday-today-

நடிகர் கார்த்தி தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு தன் ரசிகர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


Advertisement

நடிகர் கார்த்தி தனது  44வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு நடிகர் கார்த்தி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ரசிகர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், 

அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்!


Advertisement

இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையாக உள்ளது! அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள, 'மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்தல், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி; தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்'. இதுவே இந்தப் பிறந்தநாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்!

இவ்வாறு கார்த்தி கூறியுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close